2025 டிசெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவு…

Editorial   / 2025 டிசெம்பர் 29 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மேற்கு கடற்படை கட்டளை கடற்படை வீரர்களின் பங்களிப்புடன் சனிக்கிழமை  காலி முகத்திடல் கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வானது (27) நடத்தப்பட்டது. 

இந்த கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ் காலி முகத்துவாரத்திற்கு முன்னால் உள்ள கடற்கரையில் சிதறிக் கிடந்த பிளாஸ்டிக், பொலித்தீன் உள்ளிட்ட திடக்கழிவுகள் கடற்கரையிலிருந்து அகற்றப்பட்டு கடற்கரைச் சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் முறையாக அப்புறப்படுத்தப்பட்டது.

மேலும், மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி உட்பட 200 க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் இதில் கலந்து கொண்டனர்.

எம்.யூ.எம்.சனூன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X