Editorial / 2017 டிசெம்பர் 16 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்குப் பல்கலைக்கழக கற்புல தொழிநுட்பத்துறையில் , இறுதி ஆண்டில் கல்விகற்கும் மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட ஓவியங்களைக் காட்சிப்படுத்தும் நிகழ்வுகள் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில், குறித்த பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டில் கல்வி கற்கும் சிந்துசா தவதத்தினத்தின் கைவண்ணத்தில் உருவான INFINITY PAINTING கடந்த யுத்த இழப்புகளும் யுத்த சூழ்நிலையில் சிறார்கள் அனுபவித்த துன்பியல் வடுக்களை சுமந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தும் ஓவியக்கண்காட்சி, மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் கண்காட்சி மண்டபத்தில் நேற்று(15) நடைபெற்றது.
குறித்த கண்காட்சி எதிர்வரும் ( திங்கள் செவ்வாய் ஆகிய தினங்களிலும்) 18, 19 ஆகிய திகதிகளிலும் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.



24 Feb 2026
24 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Feb 2026
24 Feb 2026