Freelancer / 2023 மார்ச் 18 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்,சந்ரு
கந்தப்பளை - பார்க் தோட்ட பிரிவுக்கு உட்பட்ட சந்திரகாந்தி (எஸ்கடேல்) தோட்ட மூன்று மாடி தேயிலை தொழிற்சாலை இன்று அதிகாலை 1.30 மணியளவில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
பழமைவாய்ந்த குறித்த தேயிலை தொழிற்சாலையை பார்க் தோட்ட அதிகாரி கையேற்று அங்கு கழிவு தேயிலை அறைத்து பொதி செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தீ பிடிப்பு சம்பவம் இடம்பெற்ற வேளையில் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் இருக்கவில்லை. இதனால் உயிர் ஆபத்துக்கள் எதுவும் இடம் பெறவில்லை.
திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தில் எரிந்த தொழிற்சாலையின் தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர தோட்ட மக்கள்,கந்தப்பளை பொலிஸார்,மற்றும் நுவரெலியா மாநகரசபை தீயணைப்பு படையினர் பாடுப்பட்டும் தொழிற்சாலை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.
தீ சம்பவத்திற்குறிய காரணம் இதுவரை கண்டுப்பிடிக்கவில்லை. சம்பவம் தொடர்பாக விசாரணைகளை கந்தப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R


2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago