Editorial / 2024 ஜூலை 09 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

அதிபர்கள், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தின் காரணமாக நீர்கொழும்பில் பாடசாலை கல்வி நடவடிக்கை முடக்கம்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்கள், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில், செவ்வாய்க்கிழமை (09) ஈடுபடுவதன் காரணமாக, நீர்கொழும்பு கல்வி வலய பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் செயலிழந்து உள்ளன. நீர்கொழும்பு கல்வி வலயத்தில் கட்டானை, நீர்கொழும்பு, ஜா-எல ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகளிலேயே இவ்வாறு கல்வி நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
சில பாடசாலைகளில் மாணவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வருகை தந்த போதிலும் ஆசிரியர்கள், அதிபர் வருகை தராததன் காரணமாக மாணவர்கள் வீடு திரும்புவதை காணக் கூடியதாக இருந்தது.
நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி, கடற்கரை தெரு சாந்த செபஸ்தியார் வித்தியாலயம், புனித பீற்றர் கல்லூரி ஆகியவற்றில் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எம். இஸட். ஷாஜஹான்









2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago