2025 மே 19, திங்கட்கிழமை

கலைஞரின் உடலுக்கு இ.தொ.கா அஞ்சலி செலுத்தியது ...

Editorial   / 2018 ஓகஸ்ட் 08 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்   

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதியின் உடலுக்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் குழுவினர், நேரடியாகச் சென்று, அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கலைஞர் கருணாநிதி, உடல்நலக் குறைவு காரணமாக, சென்னையிலுள்ள காவேரி மருத்துவ மனையில் நேற்று (7) உயிரிழந்தார்.

இறுதி அஞ்சலிக்காக அவரது உடல், சென்னையிலுள்ள ராஜாஜி அரங்கத்தில் இன்று (8) வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் என பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவரும் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  ஆறுமுகன் தொண்டமான், மத்திய, ஊவா மாகாண அமைச்சர்களான எம்.ரமேஷ்வரன், செந்தில் தொண்டமான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை ஆகியோர் நேரில் சென்று  அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அதன்பின் ஆறுமுகன் தொண்டமான் தமிழக செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X