Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 07 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுமக்களை அறிவூட்டும் வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு சுகாதார திணைக்களத்தால் எயிட்ஸ் நோய் தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வீதி நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள், ஏறாவூர் பொதுச்சந்தை வளாகத்தில் இன்று (06) நடைபெற்றது.
ஏறாவூர் - பிரதேச சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் திருமதி கே. துரைராசசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, 'கவனமாகக் கவனிப்போம்' எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு பிராந்திய பாலியல் மற்றும் எயிட்ஸ் தடுப்புப் பிரிவு டொக்டர் திருமதி அனுசா சிறிசங்கர், சுகாதார திணைக்கள அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், தாதி உத்தியோகத்தர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாட்டத்திலுள்ள 14 பிரதேச சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளிலும் இவ்வாறான நிகழ்வுகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக, சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.
(படப்பிடிப்பு: பேரின்பராஜா சபேஷ்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .