Freelancer / 2023 ஒக்டோபர் 26 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் அருகாமையில் தீப்பந்தம் ஏந்தி கவனயீர்ப்பு போராட்டமொன்று புதன்கிழமை (25) இரவு நடைபெற்றது.
மின்சார கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியினர் இக்கவனயீர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

அக்கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் தர்மரெட்ணம் தயானத்தன் தலைமையில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

போராட்டக்காரர்கள் தீப்பந்தங்களை ஏந்தியவாறு மின்கட்டண அதிகரிப்பை ஏற்படுத்தி ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே, மின் கட்டணத்தை கூட்டாதே, ரணில் மற்றும் ராஜபாக்சவை கண்டிக்கின்றோம் போன்ற கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
13 minute ago
21 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
21 minute ago
1 hours ago
3 hours ago