2025 மே 19, திங்கட்கிழமை

காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை தினம்...

Editorial   / 2018 ஓகஸ்ட் 03 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், டீ.எல்.ஜவ்பர்கான்

காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலையின் 28ஆவது ஷுஹதாக்கள் தினம், காத்தான்குடியில் இன்று  (3) அனுஷ்டிக்கப்பட்டது.

இதனையொட்டி படுகொலை இடம்பெற்ற பள்ளிவாயல்களான காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆப்பள்ளிவாயல் ஹுஸைனிய்யா பள்ளிவாயல் ஆகிய இரண்டு பள்ளிவாயல்களிலும் குர்ஆன் ஓதுதல் விஷேட பிராத்தனை என்பன இடம்பெற்றன.

இதில் உலமாக்கள் முக்கியஸ்தர்கள் பள்ளிவாயல் நிருவாகிககள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த தினத்தையொட்டி காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆப்பள்ளிவாயல் மைய்யவாடியும் சிரமானம் செய்யப்பட்டதுடன், மேட்டு நில மைய்யவாடிக்கான அடிக்கல்லும் நாட்டி வைக்கப்பட்டது.

கடந்த 3.8.1990இல் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் ஹுஸைனிய்யா பள்ளிவாயல் ஆகிய இரண்டு பள்ளிவாயல்களிலும் இரவு புனித இஷாத்தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 103 பேர் கொல்லப்பட்டதுடன் ஐம்பதுக்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த தினைத்தை ஆண்டு தோறும் ஷுஹதாக்கள் தினமாக அனுஷ்டித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X