Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2024 ஏப்ரல் 24 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
Srilanka parrot beak association இலங்கை வரலாற்றில் இரண்டாவது தடவையாக நடத்திய மாபெரும் கிளிமூக்கு சேவல்களின் கண்காட்சி கடந்த 20 ஆம் திகதி கெக்கிராவையில் நடைபெற்றது .
மேற்படி கண்காட்சியில் நாடு பூராகவும் இருந்து சுமார் 50 இற்கும் மேற்பட்ட கிளிமூக்கு சேவல்கள் பங்கேற்றிருந்தன.
இதன்போது, கிளி மூக்கு விசிறிவால் கோழி வளர்ப்பாளர்களுடன் பறவை ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்த இக்கண்காட்சியில் பங்கேற்ற சேவல்களுக்கு நினைவுச் சின்னங்களுடன், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்தியாவில் மட்டுமே வளர்க்கப்பட்டு வந்துள்ள இச்சேவல் இனம் இன்றளவில் இலங்கையில் நூற்றுக்கணக்கான வளர்ப்பார்களால் வளர்க்கப்படுகின்றது.
கண்ணைக் கவரும் அழகிய நிறத்துடனும் தோற்றத்துடனும் காட்சியளிக்கும் இச்சேவல் வளர்ப்பானது சிறந்த பொழுதுபோக்காக ஒருபுறம் இருக்க பொருளாதார ஈட்டு வழிமுறையாகவும் இருக்கிறது.
இலங்கையில் இருந்து பல உலக நாடுகளுக்கு இச்சேவல்கள் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
ரஸீன் ரஸ்மின்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
33 minute ago
41 minute ago
50 minute ago