Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 31 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா-2017, மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி வளாகத்தில், இன்று (31) ஆரம்பமாகியது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில், தமிழ், முஸ்லிம், பாரம்பரிய கலை, கலாசார,விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வகையில், பாடசாலை மாணவர்களின் பண்பாட்டுப் பேரணி இடம்பெற்றது.
கிழக்கு மாகாண கல்வி, தகவல் தொழில்நுட்பக்கல்வி முன்பள்ளிக்கல்வி, விளையாட்டு, பண்பாட்டலுவல்கள், இளைஞர் விவகாரம், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் சி.தண்டாயுதபாணி, பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
முதலாம் நாள் அரங்க நிகழ்வு ஆய்வரங்கம், “கிழக்கின் சமகால இலக்கிய முயற்சிகள்“ என்ற தலைப்பில், ஓய்வு நிலை அதிபர் கவிஞர் சோ.பத்மநாதன் தலைமையில், அன்புமணி அரங்கில் காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
ஆசிரியர் எம்.ஜிப்ரி ஹஸன், விரிவுரையாளர் கலாநிதி சு.சிவரெத்தினம், திரைப்படப் படைப்பாளி காசிநாதர் ஞானதாஸ், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.சந்திரசேகர் ஆகியோர், ஆய்வரங்கில் பங்குபற்றினர்.
(படப்பிடிப்பு: பி.எம்.எம்.ஏ.காதர்)
4 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago