2025 மே 19, திங்கட்கிழமை

கௌரவிப்பு விழா

Editorial   / 2018 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உபதலைவருமான வே.இராதாகிருஷ்ணனுக்கு  பாராட்டு விழா, ஹட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில், இன்று  (05) காலை 10.00 மணிக்கு, நடைபெற்றது.  

கல்வி இராஜாங்க அமைச்சர், தனது அரசியல் வாழ்வில் 30 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ள அதேவேளை, இலங்கையின் கல்வி வளர்ச்சிக்காக 22 வருடங்களாகப் பணியாற்றி வருகின்றமைக்காக, இலண்டனில் சிறப்பு கலாநிதி பட்டத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிகழ்வில், கை தொழில் பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்,  நாடாளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன், மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் ஏ.லோரன்ஸ், ஹட்டன் டிக்கோயா நகரசபை தலைவர் சடையன் பலச்சந்திரன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X