Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 24, சனிக்கிழமை
Kogilavani / 2017 பெப்ரவரி 19 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்தின்
ஹட்டன், குடாகமை குடியிருப்புப் பகுதியில், கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்கள், இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், குப்பைகளை கொட்டுவதற்காக வந்த ஹட்டன்-டிக்கோயா நகரசபை வாகனத்தையும் திருப்பி அனுப்பியுள்ளனர்.
பிரதேச மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் காரணமாக, அவ்வீதி வழியான போக்குவரத்து, நேற்று சில மணிநேரம் தடைப்பட்டிருந்தது.
ஹட்டன் -டிக்கோயா நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகள், குடாகம பகுதியில் கொட்டப்படுவதனால், அப்பிரதேசத்தில் வாழும் 300 குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
அத்துடன், இவ்வீதி வழியாக நுவரெலெயா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சுற்றுலா மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளும் சுகாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.
“சுற்றுலாப் பயணிகள் அதிகம் பயணிக்கும் குறித்த மார்க்கத்தில், கழிவுகளை கொட்டுவதை நிறுத்தி, வேறு இடத்தில் கழிவுகளை கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.
ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டதால் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். இந்நிலையில், ஹட்டன் பொலிஸாரின் தலையீட்டையடுத்து, ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்துச் சென்றனர்.
இது தொடர்பில் ஹட்டன் -டிக்கோயா நகரசபை செயலாளர் எஸ்.பிரியதர்ஷினி கருத்து தெரிவிக்கையில்,
“கழிவுகளை கொட்டுவதற்கான வேறு ஓர் இடம் இனங்காணப்பட்டுள்ளது. அது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றோம். இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago