Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 மே 08 , மு.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக், மு.இராமச்சந்திரன்
நீர்நிலைகளை அசுத்தப்படுத்துவதால் நீரில் வாழும் ஜீவராசிகள் வெகுவாக உயிரிழப்பதாகவும் மீன் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எனவே, பொதுமக்கள் இதுகுறித்து அவதானம் செலுத்த வேண்டுமெனவும் சூழலியலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பிங்கா ஓயாவில் வீசப்படும் பிளாஸ்திக் போத்தல்கள், யோகட் கோப்பைகள், பொலிதீன் பைகள் உள்ளிட்ட உக்காத பொருட்கள் காரணமாக மஹாவலி கங்கையில் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன.உக்காத பொருட்களை உட்கொள்ளும் மீன் உள்ளிட்ட உயிரனங்கள் உயிரிழந்து வருவதாக சூழலயிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, மஹாவலி ஆற்று நீரை தமது அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தும் மக்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
மேலும், காசல்ரீ நீர்தேக்கத்துக்கு நீர் வழங்கும் களனி ஆற்றின் கிளை ஆறான டிக்கோயா ஆற்றில், பிரதேசவாசிகள் கழிவுகளை கொட்டுவதனால் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்படும் கழிவுகள் காசல்ரீ நீர்தேக்கத்தில் கலப்பதகாவும் இதனால், நீர்மாசடைவதுடன் மீன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, பொதுமக்கள் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டுமென அதிகாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மஹாவலி கங்கை
டிக்கோயா ஆறு
43 minute ago
45 minute ago
52 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
45 minute ago
52 minute ago
58 minute ago