Mayu / 2024 ஜூன் 19 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.ஆர்.லெம்பேட்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு புதன்கிழமை (19) 'பெண்கள் வலுவூட்டல் களுக்கான யோகா' எனும் கருப்பொருளில் மன்னார் நானாட்டான் டிலாசால் கல்லூரியில் சர்வதேச யோகா தின நிகழ்வுகள் இடம் பெற்றது.

மிகவும் சிறப்பாக நடைபெற்ற குறித்த யோகா நிகழ்வில் இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் சாய் முரளி பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும் யாழ் இந்திய துணைத் தூதரக அதிகாரி .நாகராஜன், நானாட்டான் டிலாசால் கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரர் மனோ, நானாட்டான் பிரதேச செயலாளர் திருமதி கனகாம்பிகை சிவசம்பு ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

யோகா நிகழ்வில் பாடசாலையின் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கமைய, நானாட்டான் சிவராஜா இந்து பாடசாலைக்கு இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் சாய் முரளி கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.








12 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
7 hours ago