Janu / 2024 மார்ச் 03 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து, விடுதலையான சாந்தன், திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், உடல் நலக்குறைவால் காலமானார்.
அவரது உடல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டு பிரேதப் பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை முடிவின் பின்னர் அவரது உடல் வவுனியாவிற்கு எடுத்து செல்லப்பட்டது.
வவுனியா முன்னாள் போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் அலுவலகத்திற்கு முன்பாக ஞாயிற்றுக்கிழமை (03) காலை 7.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் சாந்தனின் உடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பின்னர் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
அத்துடன் வடக்கிலும் பல இடங்களில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
வவுனியா
க. அகரன்



மாங்குளம்

32 minute ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
5 hours ago