Editorial / 2024 பெப்ரவரி 02 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கடற்கரை பகுதியை வெள்ளிக்கிழமை (2) சுத்தம் செய்தனர்.
காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் தலைமையிலான பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் "பிளாஸ்டிக் அற்ற வெள்ளிக்கிழமை" ( Plastic free Friday) எனும் தொனிப்பொருளில் கடலோர சுத்தத்தை மேற்கொண்டனர்.
சிரமதானத்தில் பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொலிஸார் பங்கு பற்றினர்.
இவ்வேலைத்திட்டத்தை இன்று காலை 7 மணி முதல் 12 மணி வரை மேற்கொண்டு இருந்தார்கள்.
இதனால் கடலோரத்தின் பெரிய பகுதிகள் பிளாஸ்டிக் அற்ற பிரதேசமாக துப்பரவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வி.ரி. சகாதேவராஜா







36 minute ago
37 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
37 minute ago
44 minute ago