Editorial / 2026 மே 08 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CCIB) ரஜங்கனே சத்தாரத்தன தேரர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்குச் சமூக வலைத்தளங்கள் வாயிலாக அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கைக்குக் காரணமான இணையவழி காணொளிகள் மற்றும் கருத்துக்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
இதேவேளை, ரஜங்கனே சத்தாரத்தன தேரரை பௌத்த மதபீடத்திலிருந்து நீக்குவதற்கு ஸ்ரீலங்கா ராமஞ்ஞ மகா நிகாய குழு கடந்த ஆண்டு நடவடிக்கை எடுத்திருந்தது. அவர் நடத்தி வந்த யூடியூப் (YouTube) தளத்தில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட உள்வாரி விசாரணைகளைத் தொடர்ந்தே, அவரைச் சங்க அமைப்பிலிருந்து நீக்கத் தீர்மானிக்கப்பட்டதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
11 minute ago
17 minute ago
28 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
17 minute ago
28 minute ago
32 minute ago