R.Tharaniya / 2025 நவம்பர் 04 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட பொகவந்தலாவ சென்மேரிஸ் ஆரம்பப்பிரிவு கல்லூரின் 2025ம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா செவ்வாய்கிழமை (04) கல்லூரியின் அதிபர் ராஜநாயகம் தலைமையில் பொகவந்தலாவ
ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஹட்டன் வலயகல்வி பணிமனையின் பணிப்பாளர் நாமல் கருணாரத்ன, ஹட்டன் வலயகல்வி பணிமனையின் வளவாளர்களான தங்கவேல்.மற்றும் அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் தரம் 01 தொடக்கம் தரம் 05 வரையிலான மாணவ மாணவிகளுக்கு சான்றிதல்கள் மற்றும் பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது புலமைப் பரிசில் சித்தியடைந்த மாணவர்கள் உட்பட 152மாணவ மாணவிகளுக்கு சான்றிதல்களும் பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வின் முதற்கட்டமாக பிரதம அதிதிகள் பொகவந்தலாவ நகரில் இருந்து விழா மண்டபத்திற்கு அணிவகுப்போடு அழைத்து வரப்பட்டனர்.
பாடசாலை நிர்வாகம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம் இணைந்து ஹட்டன் வலயக்கல்வி பணிப்பாளருக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டதோடு மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.







9 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Nov 2025