2025 மே 19, திங்கட்கிழமை

செயற்கை கை அன்பளிப்பு…

Editorial   / 2018 ஜூலை 03 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறிபுர மத்திய மகா வித்தியாலயத்தில் 10 ஆம் ஆண்டில் கல்வி கற்கும், பிறவியிலேயே கையை இழந்த என்.பி.வனிதா தமயந்தி என்ற மாணவி, தனக்கு செயற்கை கை ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு உதவுமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேனவிடம் முன்வைத்த வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில், அம்மாணவிக்கு ஜனாதிபதியால் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து செயற்கை கை ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

2017ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி சிறிபுர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சித்திட்டமொன்றில் ஜனாதிபதியை சந்தித்த இம்மாணவி, தனக்கு செயற்கை கை ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு தேவையான உதவியை வழங்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அந்த சந்தர்ப்பத்தில், குறித்த மாணவிக்கு பொருத்தமான செயற்கை கை ஒன்றை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அந்த வகையில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவிற்கு அறிவிக்கப்பட்டு, இலங்கை இராணுவ புனர்வாழ்வு பணிப்பாளர் சபையின் கீழ் இயங்கும் நிலையமொன்றினால் இந்த செயற்கை கை உற்பத்தி செய்யப்பட்டதுடன், இதற்கான ஆலோசனை மற்றும் மூலப்பொருள் ஜெர்மனி நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்டது. இந்த செயற்கை கையை உற்பத்தி செய்வதற்கு இரண்டு இலட்சம் ரூபாய் செலவாகியுள்ளதுடன், இதற்கான நிதி ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்பட்டது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X