Janu / 2026 மார்ச் 31 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 128-வது பிறந்ததினம் செவ்வாய்க்கிழமை (31) அன்று மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
இலங்கைத் தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா ஞாபகார்த்த பூங்காவில் இந்நிகழ்வு நடைபெற்றது. தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு கிளையின் தலைவரும், மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வருமான சிவம் பாக்கியநாதன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து ஸ்ரீநேசன், இளையதம்பி சிறிநாத் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை விரிவுரையாளர் நடராசா புஸ்பராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு அன்னாரது நினைவுத் தூபிக்கு மாலை அணிவித்தனர். அதனை தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
கனகராசா சரவணன்










25 minute ago
34 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
34 minute ago
1 hours ago
1 hours ago