Janu / 2026 ஏப்ரல் 02 , பி.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் - இலுப்பைக்கடவை கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்டு கடல் அட்டைகளை பிடித்த 36 சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 1,750 கடல் அட்டைகள், 6 டிங்கி படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான 'புவனேக' கடற்படைக் கப்பல் பிரிவினரால், கடந்த புதன்கிழமை (01) இரவு இலுப்பைக்கடவை கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் இலுப்பைக்கடவை மற்றும் நாச்சிக்குடா பகுதிகளைச் சேர்ந்த 22 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள், கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் உபகரணங்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னாரிலுள்ள பூநகரி மீன்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அத்துடன், கிளிநொச்சி மீன்வளத் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் அனைத்தும் நாச்சிக்குடா இறங்குதுறைக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் மீண்டும் விடுவிக்கப்பட்டன.
எம்.எச்.எம். சியாஜ்


23 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
46 minute ago
1 hours ago