Editorial / 2026 மே 18 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்
இலங்கைத் தமிழரசு வாலிபர் முன்னணியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், 17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சுடரேற்றல் மற்றும் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (18) திங்கட்கிழமை காலை 7:30 மணியளவில், திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி தேவஸ்தான முன்றலில் நடைபெற்றது.
முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், ஈகைச் சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், திருகோணமலை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கந்தசாமி செல்வராஜா, பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் வெள்ளைத்தம்பி சுரேஷ்குமார் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள், கட்சியின் பிரதிநிதிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.




27 minute ago
49 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
49 minute ago
51 minute ago
1 hours ago