Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Freelancer / 2021 ஜூன் 19 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித்
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தியாகிகள் தின நிகழ்வு இன்றைய தினம் (19) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா மன்றத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, மண்முனை மேற்குப் பிரதேச சபை உபதவிசாளர் பொன்னம்பலம் செல்லத்துரை,மண்முனை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் பி.கிருஸ்ணகுமார், மண்முனை தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் மு.அருட்செல்வம் மற்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா மன்றத்தின் மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
1990.06.19ம் திகதியன்று இந்தியாவின் சென்னையில் ஈழமக்கள் புரட்சிகர விடுலை முன்னணியின் செயலாளர் நாயகம் பத்மநாபா உட்பட 13 தோழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட அன்றைய தினத்தை தியாகிகள் தினமாகப் பிரகடனப் படுத்தி 1981ம் ஆண்டு தொடக்கம் மரணித்த அனைத்து தோழர்களையும் நினைவு கூர்ந்து இந் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்படுகின்றது.
M
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
16 minute ago
32 minute ago
40 minute ago