Mayu / 2023 டிசெம்பர் 08 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, இலுப்படிச்சேனை வேப்பவெட்டுவான் பிரதான வீதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை (08) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டம் காட்டு யானை தொல்லைக்கு தீர்வு பெற்றுத்தர கோரி பதாதையை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் பிரதேச மக்களால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் அவ்வழியால் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் திடீரென வருகை தந்ததை அவதானித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரது வாகனத்தை வழிமறித்து தமக்கான பிரச்சினைக்கு தீர்வு பெற்று தருமாறும் காட்டு யானை தொல்லையில் இருந்து தம்மை விடுவிக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
இதன் போது அங்கு வருகை தந்த கரடியனாறு பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வை பெற்றுத்தருவது தொடர்பாக - பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


11 minute ago
48 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
48 minute ago
49 minute ago