2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2018 ஜூன் 08 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

தோட்ட நிர்வாகத்தின் எதேச்சதிகார போக்கைக் கண்டித்து, மஸ்கெலியா சாமிமலை ஸ்டொக்கம் தோட்ட மக்கள், வீதி மறியல் போராட்டத்தில்,  இன்று (8) காலை ஈடுபட்டனர்.

தேயிலைத் தோட்டங்கள் காடாக்கப்படுவதாகவும் தொழிலாளர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு தோட்ட நிர்வாகம் அம்பியுலன்ஸ் வண்டி வழங்கப்படுவது இல்லை என்றும் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும் குழந்தை  பெறும் தாய்மார்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படுவது இல்லை என்றும் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே, மேற்படி தேவைகளை நிறைவேற்றிக்கொடுக்க தோட்ட நிர்வாகம் முன்வர வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கும் தொழிலாளர்கள், தோட்ட முகாமையாளரை வெளியேற்றுமாறும் கோரியே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாமிமலை- ஹட்டன் பிரதான வீதியை மறித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அவ்வீதி வழியான போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலம் தடைப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 200க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் கலந்துகொண்டதோடு, ஸ்டொக்கம் தோட்டத் தேயிலை தொழிற்சாலையில் இருந்து ஸ்டொக்கம் தோட்டச் சந்திவரை பேரணியிலும் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .