Editorial / 2020 செப்டெம்பர் 25 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு புனித வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையில் 200ஆவது ஆண்டு நிறைவையொட்டி, இன்று (25) காலை நடைபவனி நடைபெற்றது.
பாடசாலையின் இலட்சினை பொறிக்கப்பட்ட வாகனத்துடன் கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பமான நடைபவனி, மட்டக்களப்பு பிரதான வீதியூடாக நகரைச் சென்றடைந்து, அங்கிருந்து பாடசாலையைச் சென்றடைந்தது.
இந்த நடைபவனியில் பாடசாலையின் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
1820ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு புனித வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையானது இலங்கையில் மிகவும் பழமையான பெண்கள் பாடசாலையாகும்.
பல்வேறு கலாசார பண்பாடுகளைத் தாங்கியவாறும் பாடசாலையின் நினைவுகளை சுமந்தவாறும் இந்த நடைபவனி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
(படப்பிடிப்பு - வா.கிருஸ்ணா)







39 minute ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
5 hours ago
5 hours ago