2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நன்கொடை…

அப்துல்சலாம் யாசீம்   / 2018 பெப்ரவரி 08 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சேனையூர் புவனேஸ்வரி வித்தியாலத்தில்  கல்வி கற்கும்  மாணவர்கள் மூவர், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றமைக்காக, 

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, நன்கொடையாக  தனது சொந்த நிதியிலிருந்து தலா 10,000 ரூபாய் வீதம் காசோலைகளை, நேற்று (07) வழங்கி வைத்தார்.

பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 21 வருடங்கங்களின் பின்னர் முதன் முறையாக மூன்று மாணவர்கள்  வெட்டுப்புள்ளிக்கு மேலாகப் புள்ளிகளைப் பெற்றமை தொடர்பிலும் பாடசாலையின் அபிவிருத்திகள் தொடர்பிலும், கிழக்கு  மாகாண ஆளுநரிடம், அதிபர் திருமதி உமாரதீஸ்தரன் கலந்துரையாடிய போதே, இந்த நன்கொடை வழங்கப்பட்டது.

(படப்பிடிப்பு: அப்துல்சலாம் யாசீம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X