Janu / 2026 ஏப்ரல் 30 , பி.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய மலைநாட்டின் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில், மாலை வேளைகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலையகத்தின் பல பகுதிகளில் வெள்ளநீர் உட்புகுந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நாவலப்பிட்டி நகரிலுள்ள கண்டி - கம்பளை வீதி மற்றும் பேருந்து நிலையபகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையினால் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. முறையான வடிகால் அமைப்பு இன்மையால், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து பேருந்து நிலையத்திலுள்ள வர்த்தக நிலையங்களுக்குள் உட்புகுந்து வருகின்றது.
பேருந்து நிலைய பகுதியில் வெள்ள நீர் தேங்கி நிற்பதால் வாகன சாரதிகள், நடத்துநர்கள், பயணிகள் மற்றும் பாதசாரிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக, பாடசாலை மாணவர்கள் மற்றும் அப்பகுதியில் வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் நாவலப்பிட்டி நகர் இவ்வாறானதொரு அனர்த்தத்திற்கு முகம் கொடுத்து வருவதால், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகக் கவனம் செலுத்தி, நிரந்தரத் தீர்வொன்றைப் பெற்றுத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
செ.தி. பெருமாள்





2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago