2026 பெப்ரவரி 23, திங்கட்கிழமை

நீல மாணிக்கங்கள்...

Editorial   / 2022 ஜனவரி 24 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் நடாத்தப்பட்ட ஒரு கவர்ச்சியான நிகழ்வில் இலங்கையின் இரத்தினக் கற்கள் காட்சிப்படுத்தப்பட்டன. 'லார்வினர் - ஜெம் ஆர்ட் ஜூவல்லரி' இன் அனுசரணையுடன், பிரமிக்க வைக்கும் இலங்கையின் நீல மாணிக்கம்  மற்றும் ஏனைய வண்ணக் கற்கள் காட்சிப்படுத்தப்பட்டன. பல உயர்தர வர்த்தகர்கள் உட்பட அழைக்கப்பட்ட சுமார் 100 விருந்தினர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

'லார்வினர் - ஜெம் ஆர்ட் ஜூவல்லரி' இலங்கையின் சிறந்த நீல மாணிக்கம் மற்றும் இரத்தினக்கல் தொழிலை ஊக்குவிப்பதற்கு எதிர்பார்த்தது.

இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 65 ஆவது ஆண்டு விழா மற்றும் ரப்பர்-அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்வுகளை தூதரகம் ஏற்பாடு செய்து வருகின்றது. முன்னதாக, சுற்றுலா நிகழ்வும் ஊடக நிகழ்வும் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X