2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நினைவு நாள்...

Sudharshini   / 2016 ஏப்ரல் 30 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

உன்னதமான ஊடக சுதந்திரத்திற்காக உயிர் கொடுத்த ஊடகவியலாளர்களிற்கான பொது நினைவு நாள் நினைவேந்தலும் அமரர் தராகி சிவராமின் 11ஆம் ஆண்டு நினைவு நாளும்  வெள்ளிக்கிழமை (29) யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த ஊடகவியலாளர்கள் நினைவு தூபி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களிற்கான நினைவு சுடரேற்றலும் மலர் அஞ்சலி நிகழ்வும் மாலை இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து யாழ்.பொது நூலக மண்டபத்தில் நினைவு உரைகள் மற்றும் உன்னதமான ஊடக சுதந்திரத்திற்காக உயிர் கொடுத்த ஊடகவியலாளர்களிற்கான பொது நினைவு நாள் நினைவேந்தல் உத்தியோகபூர்வ அறிவிப்பு என்பவை வெளிடப்பட்டது.

யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் ஊடக சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கும் தெற்கு அமைப்புக்கள் தமது ஆதரவை வழங்கி இருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .