Janu / 2026 ஜனவரி 27 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் உழவர் திருநாளாம் தைத் திருநாளை முன்னிட்டு பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.
நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் தமிழர் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் அறுவடை நிகழ்வு, புதிர் எடுத்தல், நெல் குற்றி புத்தரிசி எடுத்து பொங்கல் வைக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளை பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் ஐ.எஸ்.ஏ.கமல் நெத்மினி ஆரம்பித்து வைத்தார்.
மேலும் உழவர் கண்காட்சியும், பாடசாலை மாணவர்களினால் தமிழரின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பறைசாற்றும் வகையில் பாரம்பரிய நடனங்கள், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்று விழாவை சிறப்பித்தன.







7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago