Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Princiya Dixci / 2020 நவம்பர் 23 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளின், தரம் 06க்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான மூன்றாம் தவணைக் கற்றல் நடவடிக்கைகள், நாடளாவிய ரீதியில் இன்று (23) ஆரம்பமாகின.
அந்தவகையில், கிழக்கு மாகாண பாடசாலைகள் அனைத்தும் சுகாதார அறிவுறுத்தலுக்கு அமைய, கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. மாணவர்கள் முகக்கவசம் அணிந்து, கைகளைக் கழுவி, சமூக இடைவெளிகளைக் கடைப்பிடித்தனர்.
அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் அதிகமான மாணவர்கள் பாடசாலைகளுக்கு சமுகமளித்திருந்ததை அவதானிக்க முடிந்தது. திருகோணமலை மாவட்டத்தில் மழை காரணமாக மாணவர் வரவில் வீழ்ச்சி காணப்பட்டது.
(தகவலும் படங்களும் - தீஷான் அஹமட், ஏ.எம்.ஏ.பரீட், ஜவ்பர்கான், எம்.எஸ்.எம். ஹனீபா, எப்.முபாரக், சகா, ஏ.எல்.எம்.ஷினாஸ், வி.சுகிர்தகுமார்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 May 2025