2025 ஜூலை 21, திங்கட்கிழமை

பாடசாலைக்கு விஜயம்...

Editorial   / 2018 ஓகஸ்ட் 06 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவலப்பிட்டி கதிரேசன் மாதிரி ஆரம்பப் பாடசாலையின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்வதற்காக, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார், மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் ஆகியோர், அப்பாடசாலைக்கு, நேற்று முன்தினம் விஜயம் மேற்கொண்டனர்.

இதன்போது அவர்கள், பாடசாலையின் தற்போதையக் கல்வி வளர்ச்சி, பாடசாலைக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவை குறித்து, பாடசாலையின் அதிபர் பெ.லோகஸ்வரனிடம் கேட்டறிந்து கொண்டனர்.

இதன்போது, பாடசாலையின் நுழைவாயில் பாதையைச் செப்பனிடுவதற்கு நிதியொதுக்கீடு செய்து தருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார், பாடசாலை அதிபரிடம் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X