Mayu / 2024 ஒக்டோபர் 23 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உட்பட மாவட்டத்தில் உள்ள ஆதார வைத்தியசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டை நீக்குவதற்காக இரத்த தானம் செய்யுமாறு வலியுறுத்தி புதன்கிழமை (23) மட்டக்களப்பு ஆரையம்பதியில் பாரிய விழிப்புணர்வு பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டது.

ஆரையம்பதி பிரதேச வைத்திய சாலையின் வழிகாட்டலில் மட்டக்களப்பு எகெட் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இப்பாத யாத்திரை ஆரையம்பதி சிகரம் கத்தோலிக்க தேவாலயத்திற்கு முன்னால் ஆரம்பமாகி மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி வழியாக ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையை அடைந்தது.

மட்டக்களப்பு மாவட்ட எகெட் பணிப்பாளர் அருட்தந்தை எஸ்.எல்.ஜெயநிக்சன் தலைமையில் இடம்பெற்ற இப்பாத யாத்திரையில் ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் கே.குணராஜ சிங்கம் மற்றும் சர்வ மத தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025