Editorial / 2024 செப்டெம்பர் 11 , பி.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 103வது நினைவு தினம் வவுனியா குருமன்காடு சந்தியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலை அடியில் புதன்கிழமை (11) இடம்பெற்றிருந்தது.
இதன் போது அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அத்துடன் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தொடர்பான நினைவு பேருரைகளை செல்வி து.டன்சிகா, செல்வன் பி.அனிஸ்ரன், செல்வன் ரொ.றக்ஸன், மற்றும் தமிழ்மணி அகளங்கனாலும் ஆற்றப்பட்டிருந்தது.
வவுனியா நகரசபை மற்றும் தமிழ் விருட்சத்தின் ஏற்பாட்டில் சிறீசங்கரின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
செட்டிகுளம் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜெகதீஸ்வரன், நகர சபை முன்னாள் உறுப்பினர் சேனாதிராஜா, நகரசபை முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் புஷ்பாகரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்க தலைவர் ரவீந்திரன், பொது அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







13 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
26 minute ago