2025 மே 15, வியாழக்கிழமை

புதிய களனி பாலம்...

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 19 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய களனிப் பாலம் செப்டம்பர் இறுதியில் பொதுமக்களுக்காகத் திறந்துவைக்கப்படுமென நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
 

இன்று(19)  Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்ற களனிப் பால மீளாய்வுக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” 2014 இல் பூர்வாங்க திட்டம் தயாரிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது அதிதொழில்நுட்பக் கம்பிகளின் மீது நிர்மாணிக்கப்படும்  புதிய களனிப் பாலத்தின்  நிர்மாணப் பணிகள் 98.5%  நிறைவடைந்துள்ளது” என்றார்.

 
மேலும் இப்பாலத்தின் முடிவில் இருந்து ஒருகொடவத்தை சந்தி  வரை வீதியின் இருபுறமும் மரங்களை நடுவதற்கும், அதற்கு தண்ணீர் வழங்க நிலத்தடி நீர் குழாய் அமைப்பை உருவாக்குமாறும்  அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.




 
 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .