Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 13 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்தின் செளபாக்கிய தூரநோக்கு திட்டத்திற்கு அமைவாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் வழிகாட்டலின் கீழ் அமைக்கப்பட்ட கொக்குவில் புதிய பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எச்.சுதத் மாசிங்கவின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் தினேஸ் கருணாநாயக்கவின் பங்குபற்றலுடன் கிழக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கமல் சில்வாவினால் ஞாயிற்றுக்கிழமை (12) திறந்து வைக்கப்பட்டது.
மத தலைவர்களின் ஆசியுரையுடன் நடைபெற்ற இந்த திறப்பு விழாவுக்குப் பின்னர், பொலிஸ் நிலைய வளாகத்தினுள் பயன்தரும் மரக்கன்றுகள் அதிதிகளினால் நடப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
(படங்களும் தகவலும் ஏ.எச்.ஏ. ஹுஸைன் )
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
20 minute ago
36 minute ago