2025 ஜூலை 19, சனிக்கிழமை

பொப்பி மலர் அணிவிப்பு...

Editorial   / 2020 நவம்பர் 13 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு இலங்கை படைவீரர்கள் சங்கத்தினர் இன்று (2020.11.13) காலை விஜேராமவிலுள்ள கௌரவ பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு குறியீட்டு ரீதியில் பொப்பி மலர் அணிவித்தனர்.



சர்வதேச ரீதியில் உயிர்நீத்த படைவீரர்களை நினைவுகூரும் பொருட்டு நவம்பர் 11ஆம் திகதி உலக பொப்பி மலர் தினம் அனுஷ்டிக்கப்படுவதுடன், அதனை முன்னிட்டு இலங்கையில் பொப்பி மலர் நினைவு தினம் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் உள்ள நினைவுத் தூபிக்கு அருகில் எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

பொப்பி மலர் விற்பனை இதுவரை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், பொப்பி மலர் விற்பனையின் மூலம் பெறப்படும் நிதி பாதுகாப்புப் படையினரின் ஓய்வூதியம் மற்றும் நலன்புரி சேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X