2025 மே 19, திங்கட்கிழமை

மகாத்மா காந்திபுரம் கையளிப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்     

இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம், பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 404 தனி வீடுகள் அடங்கிய “மகாத்மா காந்திபுரம்” மக்களின் பாவனைக்காக, இன்று (12) கையளிக்கப்பட்டது.

அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையின் நடைபெற்ற இந்நிகழ்வில், இந்திய பிரதமர்  நரேந்திர மோடி, இந்தியாவிலிருந்து காணொளியின் மூலம் உரையாற்றினார்.

இந்நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், கயந்த கருணாதிலக்க, நவீன் திசாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வேலுகுமார் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சிந்து மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X