Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஒக்டோபர் 12, சனிக்கிழமை
Mayu / 2024 செப்டெம்பர் 30 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.ஆர்.லெம்பேட்
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபான சாலையை உடனடியாக இட மாற்றக் கோரி திங்கட்கிழமை (30) மக்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டம் புதிதாக திறக்கப்பட்ட மதுபானசாலைக்கு முன் இடம் பெற்றது.
குறித்த மதுபானசாலை அமைந்துள்ள பகுதியில் மக்களின் குடியேற்றம் ,இளைஞர் பயிற்சி நிலையம்,காமன்ஸ்,உற்பட பள்ளிவாசல் ஆகியவை காணப்படுகின்ற நிலையில் மக்களின் எதிர்ப்பையும் மீறி குறித்த மது விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மதுபான சாலையை திறக்க அனுமதிக்க வேண்டாம் என கோரி மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கை அளித்ததாகவும்,தாங்கள் தொடர்ந்து பல்வேறு எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையிலும் மது விற்பனை நிலையம் கடந்த வாரம் திறக்கப்பட்டதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் மக்களுடன் கலந்துரையாடினார்.எனினும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் குறித்த பகுதிக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
மக்களின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் குறித்த பகுதிக்கு வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடினார்.
இந்த நிலையில், மக்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் அரச அதிபரின் வாக்குறுதிக்கு அமைய மக்கள் ஆர்ப்பாட்டத்தை கை விட்டுச் சென்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago