2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மரஆலைகள் தீயில் கருகின...

Editorial   / 2018 மே 18 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்   

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் பகுதியில், இரண்டு மரஆலைகள், இன்று அதிகாலை தீக்கிரையாகியுள்ளனவென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இரு மரஆலைகளும் அருகருகே உள்ளதால், ஒரு மரஆலையில் முதலில் தீ பரவ ஆரம்பித்தாகவும் பின்னர் அந்தத் தீ, மற்ற மரஆலைக்கும் பரவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மரஆலைகளில் வைக்கப்பட்டிருந்த முதிரை மற்றும் தேக்கு உட்பட மரங்கள் மற்றும் இயந்திரங்கள் என்பன தீயில் கருகியுள்ளன. இதனால் மர ஆலைகளின் உரிமையாளர்களுக்கு, சுமார் 20 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மற்றும் கல்முனை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர், பொலிஸார், பொதுமக்கள்  இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .