2025 மே 21, புதன்கிழமை

மலர் தூவி வழிபட்டார் ...

Editorial   / 2017 ஓகஸ்ட் 25 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியன்மாரிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள புத்தபெருமானின் திருவுருவச் சிலைக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முதன் முறையாக மலர் தூவி வழிபட்டார்.

இந்நிகழ்வு, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், இன்று (25) முற்பகல் நடைபெற்றது.

மியன்மாரில் வசிக்கும் ஜயந்த ராஜகருணா என்பவரால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ள இந்த புத்தபெருமானின் திருவுருவ சிலை அநுராதபுரம் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி விகாரைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

ஜனாதிபதி, புத்தபெருமானின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து அநுராதபுரம் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி விகாரையை நோக்கிய பயணம் ஆரம்பமானது.

அநுராதபுரம் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி வடக்கு, வட மத்திய மாகாணங்களுக்கான பிரதான சங்க நாயக்கர் வண. நுகேதென்னே பஞ்ஞானந்த நாயக்க தேரர் உள்ளி்ட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .