Mayu / 2026 மே 01 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நுணசை முருகமூர்த்தி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வான இரதோற்சவத் திருவிழா நேற்றையதினம் (ஏப்ரல் 30) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு அதிகாலை முதலே விசேட கிரியைகள் ஆரம்பமாகின. கருவறையில் வீற்றிருக்கும் மூல மூர்த்திக்கு நறுமணப் பொருட்களால் விசேட அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனைகள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து, உள்வீதியில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி மூர்த்திக்கு வசந்த மண்டப பூஜைகள் பக்திப்பூர்வமாக நடைபெற்றன.

பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து முருகப் பெருமான் உள்வீதியூடாக பிள்ளை தண்டில் வலம் வந்து, அலங்கரிக்கப்பட்ட சித்திரத் தேரில் எழுந்தருளினார். "அரோகரா" கோஷங்கள் விண்ணைப் பிளக்க, தேரானது வெளிவீதியுலா வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தது.

இந்த மகோற்சவத்தின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானை தரிசித்தனர். பக்தர்கள் பல்வேறு வகையான காவடிகளை ஏந்தியும், கற்பூரச்சட்டி எடுத்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.

விழாவின் முக்கிய அம்சமாக தீ மிதிப்பு நிகழ்வும் இடம்பெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் தீக்குழியில் இறங்கி முருகப் பெருமானுக்குத் தமது பக்தியை வெளிப்படுத்தினர்.


பு.கஜிந்தன்
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago