Janu / 2023 ஓகஸ்ட் 01 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட புனித சிசிலியா பெண்கள் கல்லூரியில் "சயன்ஸ் எக்ஸ்போ 2023" மாபெரும் விஞ்ஞானக் கண்காட்சி கடந்த 28 மற்றும் 29 ஆந் திகதிகளில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி நிதாஞ்சலி தலைமையில் குறித்த மாபெரும் விஞ்ஞானக் கண்காட்சி கடந்த 2 தினங்கள் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

இக்கண்காட்சியில் மாணவிகளின் ஆளுமைகள், விஞ்ஞான செயல்மாதிரிகள், விஞ்ஞானக் காட்சிப் பொருட்கள், நேரடி செயல் விளக்கம், நிழற்பட மாதிரிகள், விஞ்ஞான ரீதியான செயல் விளக்கம், கோள் மண்டலம், மெய் நிகர் நிகழ்ச்சி, முப்பரிமாணக் காட்சி, தனியாள் சுகாதார ஆலோசனைக் கூடம் என்பன மூலம் வெளிப்படுத்தப்பட்டன.இக்கண்காட்சியை பிரதேசத்தின் ஏனைய பாடசாலை மாணவர்களும், பொது மக்களும் பார்வையிட்டனர்.
எம் எஸ் எம் நூர்தீன்






18 minute ago
37 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
37 minute ago
53 minute ago