2025 மே 21, புதன்கிழமை

மியான்மாருக்கு எதிராக ஆர்ப்பாட்ட பேரணிகள்…

Editorial   / 2017 செப்டெம்பர் 16 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து, கல்முனை, சாய்ந்தமருது நகரங்களில் நேற்று (15) மதியம் ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடைபெற்றன

இதன்போது பிரதேச செயலாளர்களிடம் மியான்மார் நாட்டுத் தூதுவருக்கான மகஜர்களும் கையளிக்கப்பட்டன.

இதேவேளை, காவத்தமுனை இளைஞர் காங்கிரஸ் தலைவர் அல் ஹாபிழ். என்.எம்.எம்.சியாம் தலைமையில், ஓட்டமாவடி காவத்தமுனை அல் முபாறக் ஜூம்ஆ பள்ளிவாயல் முன்பாகவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு, மியான்மார் அரசாங்கத்துக்குத் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

(படப்பிடிப்பு: அஸ்லம் எஸ்.மௌலானா, எஸ் .எல். அப்துல் அஸீஸ், எம்.எம்.அஹமட் அனாம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .