2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மீள ஆரம்பம்…

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 21 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஆறு மாதங்களுக்கு பின்னர் 200 மாணவர்களுக்கு குறைந்த ஆரம்ப பாடசாலைகள், இன்று(21) மீளத் திறக்கப்பட்டன.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள 200 மாணவர்களுக்கும் குறைந்த 12 ஆரம்ப பாடசாலைகள் திறக்கப்பட்டதாக காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி எம்.எம்.கலாவுதீன் தெரிவித்தார்.

பாடசாலைக்கு மாணவர்கள் பெரும் ஆர்வத்துடன் சமூகமளித்ததுடன், அதிபர் மற்றும் ஆசிரியர்களும் சமூகமளித்திருந்தனர்.

சுகாதார நடைமுறைகளை பேணி, கற்பித்தல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

(படங்கள் - எம்.எஸ்.எம்.நூர்தீன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X