2025 மே 19, திங்கட்கிழமை

மு.கா.ஸ்டாலினை சந்தித்தது இ.தொ.கா...

Kogilavani   / 2018 ஜூலை 31 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடல் நலக்குறைவால், சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான முத்துவேல் கருணாநிதியை நலன் விசாரிப்பதற்காக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர், இந்தியாவுக்கு நேற்று (30) பயணமாகினர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நலன் விசாரிப்புக் கடிதத்துடன் இந்தியாவுக்குச் சென்றுள்ள இந்தக் குழுவில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான், மாகாண அமைச்சர்களான செந்தில் தொண்டமான், எம்.ராமேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் பி.சக்திவேல், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

ஜனாதிபதியின் விசேட செய்தியை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம், சென்னையில் உள்ள தி.மு.க அலுவலகமான அறிவாலயத்தில் வைத்து, ஆறுமுகன் தொண்டமான் எம்.பி கையளித்துள்ளார் என, இ.தொ.கா ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், கலைஞர் கருணாநிதி உடல்நலம் குணமாகி, மீண்டும் மக்கள் பணியைத் தொடர வேண்டுமென இ.தொ.கா பிரார்த்திப்பதாகவும், இ.தொ.காவின் ஊடகப்பிரிவு அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

(படங்கள் ; இந்திய ஊடகங்கள்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X