Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 மே 01 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச தொழிலாளர் தினமான (மேதினம்) அக்கரப்பத்தனை பெரிய நாகவத்தை தோட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்ட கமிட்டி தலைவர் எஸ்.நேருதாசன் ஏற்பாட்டில் கட்சிக் கொடியேற்றும் நிகழ்வு, இன்று (1) காலை 9 மணியளவில் பூஜை வழிபாடுகளுடன் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் கதிர்செல்வம் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்
( படங்களும் தகவலும்: துவாரக்ஷான்)
மலையக மக்கள் முன்னணியின் மேதினம்
மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிளார் முன்னணியின் மேதின நிகழ்வு இன்று (01) இறம்பொடை ஸ்ரீ பக்த ஆஞ்சனேயர் ஆலயத்தில் விஷேட பூஜைகள் சுகாதார கட்டுபாடுகளை பின்பற்றி நடைபெற்றது.
இதன்போது தொழிலாளர்களுக்கும் தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கபட்டிருப்பவர்களுக்கும் ஆசிவேண்டி பூஜைகள் நடைபெற்றது.
நிகழ்வில் முன்னணியின் தவைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன், முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன், தொழிலாளர் முன்னணியின் செயலாளர் கே.சுப்பிரமணியம், நிதிச் செயலாளர் விஸ்வநாதன் புஸ்பா, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான ஆர்.ராஜாராம் உட்பட முன்னணியின் உயர் உறுப்பினர்களும் தோட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டார்கள்.
38 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
49 minute ago
1 hours ago