2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

யாழ்.பல்கலைக்கழக பொன் விழா

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 06 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட 50 ஆண்டுகள் கடந்த நிலையில் திங்கட்கிழமை (06) அன்று பொன் விழா கொண்டாட்டங்கள் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.

ஈழத்தமிழர்களின் தனிப்பெரும் அடையாளங்களில் ஒன்றாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்து,இன்று பொன்னகவைப் பெரு விழா காண்கிறது. 

இலங்கை பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகமாக 1974 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 06 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட இவ் உயர் கல்வி நிலையம், இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக வியாபித்து நிற்கிறது.

ஐம்பதாவது ஆண்டைக் கடந்திருக்கும் அப்பல்கலைக்கழகத்தின் பன்னிரண்டு பீடங்களும் இணைந்து பொன்விழா நிகழ்வை  வெகு விமரிசையாக கொண்டாடுகின்றது.  

காலை 09.00 மணிக்கு ஆரம்பமான பொன் விழா நிகழ்வில் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்ன பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்உபதலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கே.எல்.வசந்தகுமார் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

பல்கலைக்கழகத்தின் ஐம்பது வருட கால கல்விப் பணிவரலாற்றை எடுத்தியம்பும் வகையில் அமைந்த வரலாற்றுப் பொக்கிஷமான “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொன் அகவை வரலாறு”எனும் நூலும்,பல்கலைக்கழகத்தின் பொன்னகவையை நினைவு கூரும் வகையிலான நினைவு முத்திரை வெளியீடும இந்நிகழ்வில் சிறப்பாக நடைபெற்றது.

நிதர்சன் வினோத்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X