2025 ஜூலை 19, சனிக்கிழமை

ரோட்டறி கழகங்களுக்கு இடையே கலந்துரையாடல்

Editorial   / 2019 டிசெம்பர் 13 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.தியாகு

 

டிக்கோயா ரோட்டறி கழகம், அவுஸ்திரேலியா ஹில்ஸ் கெளிவிலே ரோட்டறி கழகங்களுக்கு இடையிலான கலந்துரையாடல்,   ஹட்டனில் நடைபெற்றது.

இதில் டிக்கோயா ரோட்டறி கழகத்தின் செயலாளர் டொக்டர்.டி.சந்திரராஜனும் டிக்கோயா ரோட்டறி கழக உறுப்பினர்கபளும்   அவுஸ்திரேலியா ரோட்டறி கழகத்தின் சார்பில் நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரண் இராமச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மலையக பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள கல்வி, சுகாதாரம் தொடர்பான அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை, மிக விரைவில் கைச்சாத்திடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கான நிதியை அவுஸ்திரேலியா கழகம் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X